Categories
மாநில செய்திகள்

மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டம்… வெளியான திடீர் அறிவிப்பு…!!!!

மாநில அரசுப் பணியில் உள்ள மருத்துவர்கள் தங்களுடைய நான்கு அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென மாநில அரசிடம் கோரிவருகின்றர். இருந்த போதும் அவர்களது கோரிக்கைகள் குறித்து மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், கடந்த அக்டோபர் 25ஆம் தேதி பிற்பகலில் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் துவங்கினர்.திங்கட்கிழமையன்று நான்காவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்ந்து நடந்துவருகிறது.

ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள் கோஷங்களை எழுப்பிவருகின்றனர்.இந்நிலையில் சென்னையில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் மாதம் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அரசு மருத்துவர்களுக்கான சட்ட போராட்டக் குழு அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து மே மாதம் மேட்டூரில் சாகும்வரை போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |