இந்தியாவில் 13.3 இன்ச் OLED டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ள மற்றும் ஒருமுறை சார்ஜ் செய்தால் 9 மணி நேரம் வரை நீடிக்கக்கூடிய பேட்டரி ஆயுளை கொண்ட ASUS Vivobook 13 slate லேப்டாப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை ஸ்டோரேஜ் உடைய ASUS vivobook 13 ஸ்லேட் OLED லேப்டாப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த லேப்டாப்பில் 50-whr பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளதால் ஒருமுறை சார்ஜ் செய்தால் 9 மணி நேரம் வரை நீடிக்கக்கூடிய தன்மை கொண்டதாக உள்ளது. அதுமட்டுமின்றி இந்த லேப்டாப்பில் 13 இன்ச் OLED டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே உள்ளதால் இது டிவி பார்ப்பவர்களுக்கு புதுவித அனுபவத்தை தரும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த லேப்டாப்பில் குவாட் கோர் இன்டெல் பென்டியம் சில்வர் என் 6000 பிராஸசார் மற்றும் 170 டிகிரி வரை கழட்டி மாட்டும் வகையிலான ஹிஞ்சு, டிடேச்சபிள் கீபோர்டு ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த லேப்டாப் ஒருமுறை சார்ஜ் செய்தால் 9 மணி நேரம் வரை நீடிக்கும் தன்மை கொண்டது என்றும் அதன் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த லேப்டாப்பில் 3 மாடல்கள் வெளிவந்துள்ள நிலையில் 8 ஜிபி வேரியண்ட் விலை 62,990 என்றும், ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், ஸ்டைலஸ், ஹோல்டர் கொண்ட லேப்டாப்பின் விலை 57,990 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த லப்டாப் விண்டோஸ் 11 ல் இயங்குகிறது.