Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பேரனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற மூதாட்டி…. திடீரென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்த விபத்தில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாந்தாங்குடிபட்டி கிராமத்தில் அமைந்துள்ள தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அங்கம்மாள் என்பவர் தனது பேரனுடன் கீரணிப்பட்டி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த அங்கம்மாலை   அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அங்கம்மாள் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |