Categories
சினிமா

செம மாஸ்…. பாகுபலி பாணியில் பிரபாஸின் அடுத்த படம்…. மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!

நடிகர் பிரபாஸின் பாகுபலி படம் இரண்டு பாகங்களாக வெளியேறி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்திற்கு பின்னர் பிரபாஸ் மார்க்கெட் பெரிய அளவில் எகிறியது. அவரின் சம்பளம் 300 கோடியாக உயர்ந்துள்ளது. இவர் நடித்துள்ள ராதே ஷ்யாம் படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு வசூலிக்கவில்லை. தற்போது ஆதி புருஷ் என்ற படத்தில் நடித்து வருகின்றார். இராமாயணக் கதையின் ஒரு பகுதியை மையமாகக் கொண்ட இந்தப் படம் தயாராகி வருகின்றது. இதில் பிரபாஸ் ராமராகவும், சயிப் அலிகான் ராவணனாகவும், கிருத்தி சனோன் சீதையாகவும் நடிக்க உள்ளனர்.

இதனை ஓம் ராபர்ட் இயக்குகிறார். தெலுங்கில் தயாராகி வரும் இந்த திரைப்படத்தை தமிழ், ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளிலும் வெளியிடப்பட உள்ளது. இந்த நிலையில் திரைப்படம் திரைக்கு வந்ததும் அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாம் பாகத்திலும் நடிப்பதற்கு பிரபாஸ் சம்மதித்து விட்டதாகவும் கூறப்படுகின்றது. அதனால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

Categories

Tech |