Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘தோனி மீது பல ஆண்டு பகை’…கம்பீருடன் இணைந்து சாதித்த லக்னோ உரிமையாளர்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

ஆர் பி எஸ் ஜி நிறுவனத்தின் தலைவர் சஞ்சீவ் கோயங்கா. இவரின் சொத்து மதிப்பு சுமார் 47,405 கோடி. இவர் தற்போது லக்னோ சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர். இதற்கு முன்பு  டேபிள் டென்னிஸ் மற்றும் கால்பந்து அணிகளுக்கு ஸ்பான்சர் செய்து வருகிறார். இது மட்டுமின்றி இவர் ஐபிஎலில்  உரிமையாளராக இருந்திருக்கிறார். சி.எஸ்.கேக்கு தடை விதிக்கப்பட்ட இரண்டு வருட காலங்களில் புனே அணியை வாங்கியிருந்தார்.

மேலும் 2016 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மகேந்திர சிங் தோனியை புனே அணிக்கு கேப்டனாக நியமித்திருந்தார். ஆனால் அப்போது அணி சிறப்பாக செய்யப்படாமல் ஏழாவது இடத்தைப் பிடித்தது. இதனால் டோனி மீது அதிருப்தியில் இருந்த உரிமையாளர் சஞ்சீவ் கேங்கையா அடுத்த சீசனில் புனே கேப்டனாக ஸ்டீவன் ஸ்மித்தை நியமித்தார். இந்த சீசனில் ஸ்மித் தலைமையில் புனே அணி இறுதிப் போட்டி வரை முன்னேறி கடைசி நேரத்தில் வெற்றியை பறிகொடுத்தது.

இதனை தொடர்ந்து கேங்கையா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு அதில் தோனியை குறைவாகவும் ஸ்மித்தை புகழ்ந்தும் பதிவிட்டு இருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டில் சிஎஸ்கே மீண்டும் வந்தபோது  தோனி தலைமையில் கோப்பையை வென்றது. அப்போது தோனி கோயங்காவை குத்திக்காட்டும் வகையில் பழையபடி திரும்பியாச்சு, கோப்பையை ஜெயிச்சாச்சு என்று பேசினார்

இந்த நிலையில் 15-வது சீசனில் லக்னோ அணியின் ஆலோசகராக கவுதம் கம்பீர் நியமித்தார். இவர் தோனியை கடுமையா  விமர்சிப்பவர் என்பது அனைவர்க்கும் தெரியும். இந்த நிலையில் 210 ரன்கள் இலக்கை லக்னோ அணி வெறிகொண்டு துரத்தி வெற்றிபெற்று அசத்தியுள்ளது. இந்த போட்டி முடிந்த பிறகு கௌதம் கம்பீர் மகிழ்ச்சியில் கத்தியது தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. மேலும் கோயங்காவும் பார்வையாளர்கள் மடத்தில் துள்ளிக் குதித்துக் காட்சி ஜெயித்துவிட்டோம் என்பதையும் தாண்டி, வீழ்த்திவிட்டோம் என்ற மனநிலை இருப்பதை வெளிக்காட்டுவதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Categories

Tech |