போதிய வருமானமில்லாமல் தவித்த பால் வண்டி டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள முத்துராஜா தெருவில் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். பால் வண்டி டிரைவரான இவருக்கு சூரியகலா(32) என்ற மனைவியும் 3 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சக்திவேலுக்கு போதிய வருமானம் கிடைக்கததால் வறுமையில் தவித்து வந்தனர். மேலும் மகள்களின் வருகாலத்தை நினைத்து மனமுடைந்த சக்திவேல் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனையடுத்து வீட்டிற்கு சென்ற சூரியகலா கணவன் தூக்கில் தொங்குவதை பார்த்து கதறி அழுதார். இதனையறிந்த மோகனூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சக்திவேலின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.