பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்திய மாமனார், மாமியார், நாத்தனாருக்கு சிறைத்தண்டனையும், அபதாரமும் விதிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், மேல் அனுமார் கோவில் தெருவில் வசித்து வருபவர் ராஜகுமாரி(43). இவருக்கு வேலூர் மாவட்டம் சோளிங்கரை பகுதியை சேர்ந்த டாக்டர் அஜித் குமார்(45) என்பவருடன் கடந்த 2000 ஆண்டில் கல்யாணம் நடந்துள்ளது. கல்யாணம் முடிந்த பின் சில மாதங்கள் இருவரும் வெளிநாடு சென்றுள்ளனர். அதன் பின்னர் ராஜகுமாரி அங்கிருந்து விழுப்புரம் வந்துள்ளார்.
இந்நிலையில் ராஜகுமாரியிடம் வரதட்சணை கேட்டு அஜித் குமார் அவரது தந்தை மகாவீர்சந்த்கட்டாரியா, தாய் கவுசல்யாபாய்கட்டாரியா, சகோதரி ஆர்த்தி ஆகியோர் சேர்ந்து கொடுமைப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக ராஜகுமாரி விழுப்புரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் பேரில் அஜித் குமார் உட்பட நான்கு பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விழுப்புரம் கூடுதல் மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி வினோ அஜித்குமாரின் பெற்றோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் 30 ஆயிரம் ரூபாய் அபதாரமும், ஆர்த்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையும் ரூபாய் 20 ஆயிரம் அபதாரமும் விதித்தனர்.