Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற பெண்…. கத்தியை காட்டி மிரட்டிய நபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

பெண்ணிடம் இருந்து நகைப் பறிக்க முயன்ற 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொல்லங்கோடு அருகே மார்த்தாண்டன்துறை பகுதியில் ஜெனட் என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது பால்விலை பகுதியில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இவர் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக காட்டுக்கடை பகுதிக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ஜெனட்டை வழிமறித்து  நகையை கழற்றி தருமாறு கூறியுள்ளனர்.

அதற்கு ஜெனட் மறுப்பு தெரிவிக்கவே கத்தியை காட்டி மிரட்டி ஜெனட்டிடமிருந்து 500 ரூபாய் பணத்தை மட்டும் பறித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து ஜெனட் கொல்லங்கோடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் ராஜேஷ் மற்றும் அனிஷ் ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |