பாகிஸ்தானில் அந்நிய சக்திகள் குழப்பம் ஏற்படுத்த முயற்சி செய்வதாக குற்றம் சாட்டி பரபரப்பை ஏற்படுத்திய பிரதமர் இம்ரான் கான், அந்த அந்நிய சக்தி அமெரிக்காதான் என்று கூறி உடனே தமது கருத்தை மாற்றிக் கொண்டார். தம்மை பதவியிலிருந்து நீக்கவில்லையெனில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அந்நியநாடு ஒன்று பாகிஸ்தான் அரசியலில் தலையிடுவதாக கூறிய இம்ரான் கான், நான் தவறி அமெரிக்காவின் பெயரை உச்சரித்து பிறகு ஒரு அந்நிய நாடு என்று திருத்திக் கொண்டார்.
வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது. ஏற்கனவே பல்வேறு எம்பிக்கள் எதிர்க்கட்சியினருடன் கைகோர்த்து உள்ளதால் இம்ரான் கான் அரசு மைனாரிட்டி அரசாக மாறி இருக்கிறது. தாம் கிரிக்கெட் விளையாடும் போது கடைசிவரை விளையாடியதைப் போன்று அரசியலிலும் ஆடுவதாக கூறிய இம்ரான் கான், நான் பதவியை விட்டு போனாலும் கூடுதலான பலத்துடன் திரும்பி வருவேன் என்று தெரிவித்துள்ளார்.