Categories
தேசிய செய்திகள்

“சூப்பரோ சூப்பர்”…. நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் ரத்து…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதையடுத்து மார்ச் 31-ஆம் தேதியுடன் கொரோனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு வருவதாகவும் கட்டுப்பாடுகள் தொடர்பாக இனி புதிய உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படாது என்றும் மத்திய அரசு கடந்த வாரம் அறிவித்தது. அதன்படி நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இனி கொரோனா பாதிப்பு அதிகரிப்பது தெரிந்தால் மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக அமலில் இருந்த கொரோனா  கட்டுப்பாடுகள் அனைத்தும் நேற்றுடன் முடிவுக்கு வந்தன. பல்வேறு மாநிலங்களில் முகக்கவசம் கட்டாயம் என்ற அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் பல்வேறு மாநில அரசுகளும் கொரோனா கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்வதாக அறிவித்துள்ளன. அதே சமயம் மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து இரண்டு வருடங்களுக்கு மேலாக அமலில் இருந்த கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளதால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |