Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி கவலைய விடுங்க…. மகிழ்ச்சி செய்தி….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக கொரோனா தொற்று மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. முதலில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு, அரசின் பல்வேறு கட்ட முயற்சிகளுக்குப் பிறகு தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன. தற்போது நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருவது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் நேற்று 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 29 மாவட்டங்களில் ஒரு கொரோனா பாதிப்பு கூட உறுதி செய்யப்படவில்லை. அதிலும் குறிப்பாக அரியலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, பெரம்பலூர் மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட 7 மாவட்டங்கள் கொரோனாவே இல்லாத மாவட்டங்களாக உருவாகியுள்ளது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் மொத்தமாக 60 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 14வது நாளாக எந்த மாவட்டத்திலும் ஒரு உயிரிழப்பு கூட பதிவாகவில்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த செய்தி தமிழக மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |