பாஜகவின் புதிய தேசியத் தலைவராக ஜே.பி. நட்டா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அக்கட்சிக்குள் தற்போது தேர்தல் நடைபெற்றது. பாஜகவின் புதிய தேசிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று நடைபெறவுள்ளது. தேசிய தலைவரை அனைத்து மாநில தலைவர்கள் தான் தேர்ந்தெடுக்க முடியும் என்பதால், ஒவ்வொரு மாநிலத்துக்கும் தலைவர்கள் நியமிக்கப்பட்டனர்.
ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில் செயல்படும் பாஜகவின் தேசிய தலைவராக இருந்த அமித் ஷா, பிரதமர் மோடியின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சகராகப் பதவியேற்றதால், தேசிய தலைவர் பதவியை இழக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால், அப்பதவிக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.
இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை நடைபெற்று, வேட்புமனு பரிசீலனை, திரும்பப் பெறுதல் ஆகியவை இன்று நண்பகல் 2:30 மணிக்குள் முடிவடைந்தது.இதில் தற்போது பாஜக செயல் தலைவராக இருக்கும் ஜே.பி. நட்டா மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ததால் அவரே பாஜகவின் புதிய தேசிய தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு அமித்ஷா பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.