போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க எம்.எல்.ஏ உள்பட 24 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள பெரிய மாரியம்மன் கோவிலில் நில மீட்பு இயக்கம் சார்பில் 5001 சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்தில் கோவில் நிலத்தை மீட்க கோரி மொடக்குறிச்சி பா.ஜ.க எம்.எல்.ஏ சி.கே சரஸ்வதி கலந்து கொண்டுள்ளார். இதனையடுத்து சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மொடக்குறிச்சி பாஜக எம்.எல்.ஏ சி.கே. சரஸ்வதி உள்பட 24 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.