பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தன. நேற்று நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. இதையடுத்து வரும் 3ஆம் தேதி தீர்மானத்தின் மீது வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்கெடுப்பில் இம்ரான்கான் அரசு பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை என்றால் ஆட்சி கவிழும். இதற்கிடையே இம்ரான்கான் அரசுக்கு ஆதரவு தெரிவித்து வந்த பாகிஸ்தான் முட்டாஹிதா குவாமி இயக்கம் (எம்கியூஎம்) எதிர்க்கட்சி பக்கம் சாய்ந்தது.
எனவே இம்ரான்கான் கட்சியின் கூட்டணி பலம் நாடாளுமன்றத்தில் 179-லிருந்து 164-ஆக குறைந்துள்ளது. அதேசமயம் எதிர்கட்சிகளின் பலம் நாடாளுமன்றத்தில் 177-ஆக அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் பாராளுமன்ற தொகுதிகள் மொத்தம் 342 ஆகும். 172 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தால் தான் ஆட்சியமைக்க முடியும். ஆனால் இம்ரான்கான் கட்சிக்கு ஆதரவளித்து வந்த எம்கியூஎம் தற்போது விலக்கிக் கொண்டதால் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் எதிர்கட்சிகள் இம்ரான்கான் அரசு மீது கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது தற்போது நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்து வருகிறது.
இந்த விவாதத்திற்கு முன்னதாக இம்ரான்கான், எதிர்கட்சிகள் தன் அரசு மீது கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை திரும்ப பெற்று கொண்டால் நான் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு தயார் என்று எதிர்க்கட்சிகளிடம் வலியுறுத்தியுள்ளார். இருப்பினும் எதிர்க்கட்சிகள் இம்ரான்கானின் கோரிக்கையை நிராகரித்துள்ளன. மேலும் தற்போது பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து வருகிறது. இதையடுத்து வரும் 3ஆம் தேதி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.