Categories
மாநில செய்திகள்

TNPSC (2022) குரூப் 4 காலிப்பணியிடங்கள்…. என்னென்ன பதவிகள்?…. முழு விவரம் இதோ…!!!!

டிஎன்பிஎஸ்சி தேர்வாணைய தலைவர் பாலச்சந்திரன் கடந்த 29ஆம் தேதி குரூப்-4 தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, ஜூலை 24ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெறும் என்றும், இந்த தேர்வுக்கு மார்ச் 30 முதல் ஏப்ரல் 28 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் குரூப்-4 தேர்வு மொத்தம் 7382 காலிப்பணியிடங்களுக்கு நடைபெறுகிறது.

கல்வித்தகுதி – 10ஆம் வகுப்பு. இருப்பினும் பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு முடித்திருந்தாலும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு – 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.

தேர்வு முறை – எழுத்து தேர்வு

பணியிடங்கள் – டைபிஸ்ட், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், ஸ்டெனோ டைபிஸ்ட், நில அளவையாளர் பில் கலெக்டர்.

இளநிலை உதவியாளர் பதவியில் 3,681 காலிப்பணியிடங்கள், கிராம நிர்வாக அலுவலர் பதவியில் 274 காலிப்பணியிடங்கள், பில் கலெக்டர் பதவியில் 50 காலிப்பணியிடங்கள், ஸ்டோர் கீப்பர் பதவியில் 1 காலி பணியிடம், தட்டச்சர் பதவியில் 2,108 காலிப்பணியிடங்கள், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவியில் 1,024 காலிப்பணியிடங்கள், நகர்புற மேம்பாட்டு வாரியம், வீட்டு வசதி வாரியத்தில் தட்டச்சர் மற்றும் இளநிலை உதவியாளருக்கு 163 பணியிடங்கள் என மொத்தம் குரூப்-4 தேர்வு மூலம் 7382 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் மொத்தம் 200 கேள்விகள் 300 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும்.

Categories

Tech |