Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று (ஏப்.1) முதல்…. கட்டணம் உயர்வு அமல்…. அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் உள்ள பல்வேறு சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இன்று (ஏப்.1) முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. மத்திய அரசின் நெடுஞ்சாலை ஆணையம் சென்னை புறநகரில் உள்ள வானகரம், சூரப்பட்டு உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் ரூபாய் 10 முதல் ரூபாய் 40 வரை கட்டணத்தை அதிகரித்து உத்தரவிட்டுள்ளது.

சூரப்பட்டு சுங்கச்சாவடியில் ஒரே நாளில் திரும்பி வருவதற்காக ரூ.90-லிருந்து ரூ.100-ஆகவும், ஒருமுறை சென்று வரக்கூடிய ஜீப், வேன், கார்களுக்கு ரூ.60-லிருந்து ரூ. 70-ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் வானகரம் சுங்கச்சாவடியில் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ.65-லிருந்து ரூ.75-ஆகவும், ஒரு முறை சென்று வரக்கூடிய ஜீப், வேன், கார்களுக்கு ரூ. 45 லிருந்து ரூ. 50-ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

Categories

Tech |