வாடகை செலுத்தாத 5 கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் நகராட்சிக்கு சொந்தமாக பல கடைகள் உள்ளது. இந்த கடைகளை வியாபாரிகள் வாடகைக்கு எடுத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதில் 5 கடைகள் 85 லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ளனர். இந்த வாடகை பணத்தை செலுத்துமாறு நகராட்சி அதிகாரிகள் பலமுறை கடைகளில் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். அதனால் இதுவரை கடையின் உரிமையாளர்கள் வாடகை செலுத்தாததால் நகராட்சி ஆணையர் கடைகளை பூட்டி சீல் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
அந்த உத்தரவின்படி நகராட்சி மேலாளர் மீரான்மன்சூர், நகரமைப்பு ஆய்வாளர் விஜயகுமார், வருவாய் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கடைகளுக்கு சென்று வாடகை செலுத்தாத 5 கடைகளையும் பூட்டி சீல் வைத்துள்ளனர். மேலும் இதுபோன்ற வாடகை செலுத்தாத கடைகளின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.