சென்னையில் நடைபெற்று வரும் 43 ஆவது புத்தக கண்காட்சி, நவீன இலக்கிய புத்தகங்கள் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது. நந்தனம் ஒய்ம்சிஐம் மைதானத்தில் 11 ஆவது நாளாக புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. 9 லட்சம் வாசகர்கள் கண்காட்சிக்கு வருகை தந்துள்ளனர், என்று கூறப்படுகிறது.
இதுவரை 20 லட்சம் புத்தகங்கள் விற்பனையாகிவிட்டது, என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு வகையான புத்தகங்கள் வாங்குவதற்கு வாசகர்கள் ஆர்வம் கட்டினாலும், இளைஞர்களிடையே நவீன இலக்கிய புத்தகங்கள் அதிக வரவேற்ப்பை பெற்று உள்ளது, என்று புத்தக விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
புத்தக கண்காட்சிக்கு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று உள்ளது, என கூறப்படுகிறது. 21 ம் தேதி உடன் கண்காட்சி நிறைவு பெற இருப்பதால் வாசகர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.