வாலிபரை அரிவாளால் வெட்டிய 6 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள உக்கிரன்கோட்டை கிராமத்தின் சுதாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகன் என்ற சித்தப்பா உள்ளார் இந்நிலையில் முருகனுக்கும், சேரன்மகாதேவி சேர்ந்த மாயாண்டி என்பவருக்கும் பங்குனி உத்திரத் திருவிழாவில் நான்கு சக்கர வாகனத்தை எடுத்துச் செல்லும்போது திடீரென தகராறு ஏற்பட்டதால் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் மாயாண்டி உட்பட 6 பேர் காரில் உக்கிரன்கோட்டைக்கு சென்றுள்ளனர்.
அப்போது கருப்பசாமி கோவிலுக்கு அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த சுதாகரனை வழிமறித்து அவர்கள் அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். இதனால் காயமடைந்த சுதாகரன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மாயாண்டி உள்பட 6 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.