Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நிலவிய குளிர்ச்சியான சூழல்…. திடீரென பெய்த கனமழை…. மகிழ்ச்சியில் விவசாயிகள்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் ஒரு மணி நேரம் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள கரிசல்குளம், மேட்டூர், சாமிநாதபுரம், சங்கரமூர்த்திபட்டி கண்மாய்பட்டி, ராசாபட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வந்துள்ளது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல வெயில் சுட்டெரித்ததால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் சிரமப்பட்டுள்ளனர். அதன்பிறகு மாலை 5.30 மணியளவில் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. மேலும் இந்த மழை பருத்தி பயிருக்கு நல்லது என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |