Categories
மாநில செய்திகள்

#JUSTIN: 100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.949 கோடி ஒதுக்கீடு…. தமிழக அரசு அரசாணை வெளியீடு…..!!!!!

கிராமப்புறங்களில் 100 நாட்கள் வேலை உறுதி திட்டத்தின் வாயிலாக ஏழை மக்கள் பயனடைந்து வருகின்றனர். 100 நாள் வேலைத் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ரூபாய் 949 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பித்துள்ளது. மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித்திட்டமான 100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதியில் 75 சதவீதம் மத்திய அரசும், 25 சதவீதம் மாநில அரசும் வழங்குகின்றன. அதனடிப்படையில் தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மாநிலங்கள் பயன்படுத்திய தொகை தொடர்பான புள்ளி விபரம் நாடாளுமன்ற மக்களவையில் தெரிவிக்கப்பட்டது. கடந்த மார்ச் 24ஆம் தேதி நிலவரப்படி நாடெங்கும் சுமார் 82.85 லட்சம் பணிகள் ரூ.28,150 கோடி செலவில் கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. தமிழ்நாட்டில் அதிகபட்சம் 4.67 லட்சம் பணிகளுக்கு ரூபாய் 5,413 கோடி செலவிடப்பட்டு உள்ளது. அதன்பின் மத்தியபிரதேசம் ரூபாய் 2,806 கோடி செலவில் 6.61 லட்சம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.

Categories

Tech |