Categories
உலக செய்திகள்

மறுபடியும் முதல்ல இருந்தா…. இரண்டாக பிரிக்கப்பட்ட நகரம்…. தீவிரப்படுத்தப்பட்ட ஊரடங்கு….!!

கொரோனா தொற்று கட்டுப்படுத்துவதற்காக ஷாங்காய் நகரம் இரண்டாக  பிரிக்கப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

சீனா நாட்டில் ஷாங்காய் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகின்றது.  இந்நிலையில் வணிக மையமாக விளங்கும் ஷாங்காயில் சுமார் 2 கோடியே 60 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர்.  இந்த நகரில் கொரோனா தொற்றினால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.

மேலும் இந்த நகரில் நேற்றைய நிலவரப்படி சுமார் 6 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  இதனைத்தொடர்ந்து கொரோனா  பரிசோதனை மற்றும் சிகிச்சைகளை மேற்கொள்ளும் வகையில் ஹு வாங்பூ ஆற்றை மையமாக கொண்டு கிழக்கு பகுதி நகரம், மேற்கு பகுதி நகரம் என  இரண்டாக  பிரிக்கப்பட்டு  ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.  மேலும் ஷாங்காய் நகரில் இருந்த மிகப்பெரிய கண்காட்சி மையம் தற்காலிக  மருத்துவமனையாக மாறியுள்ளது.

Categories

Tech |