Categories
உலக செய்திகள்

அட கடவுளே…. தொடர் கனமழையால்…. பிரபல நாட்டில் மக்கள் அவதி….!!

தொடர் கனமழையினால் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி முகாம்களில் வசித்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியா நாட்டில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் லிஸ்மோர் என்ற பகுதி அமைந்துள்ளது.  இந்தப் பகுதியில் கொட்டி தீர்த்த கன மழையால் அங்கே உள்ள ஆற்றங்கரை உடைந்து சாலைகளிலும் மக்கள்  குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதனை அடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பாக முகாம்களில் தங்கி உள்ளனர்.

இந்த மாதத் தொடக்கத்தில் அப்பகுதியில் வெள்ளம் அதிகமாக சூழ்ந்ததால் மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் இது இரண்டாவது முறையாக நடந்துள்ளது.  இதேபோன்று கடலோர நகரமான பைரன் பே-வில் தொடர் மழையால் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகின்றன.

Categories

Tech |