Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திடீரென கேட்ட பயங்கர சத்தம்…. உடல் கருகி படுகாயமடைந்த தொழிலாளர்கள்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டதால் படுகாயமடைந்த 3 தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள செம்பட்டி அருகே இருக்கும் வீரக்கல் கிராமத்தில் பெருமாள் ,முருகன் ,ராஜ பெருமாள் ஆகிய மூன்று பேருக்கும் சொந்தமான பட்டாசு தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் வாணவெடி,மத்தாப்பு ,பூந்தொட்டி என பல்வேறு பட்டாசுகள் தயார் செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த பட்டாசுகளை சேமித்து வைப்பதற்காக தொழிற்சாலைக்கு அருகிலேயே குடோன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று வீரக்கல் கிராமத்தில் வசிக்கும் ஆறுமுகம்,திம்மிராயன்,கருப்பையா ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது திடீரென குடோனில் இருந்த பட்டாசுகள் வெடித்து அனைத்து இடங்களுக்கும் தீ வேகமாக பரவியது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேற முயற்சி செய்தனர். ஆனாலும் வெடி விபத்தில் சிக்கி 3 பேரும் படுகாயமடைந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தொழிற்சாலையில்  பற்றிய தீயை அணைத்துவிட்டனர்.

ஆனால் இந்த தீ விபத்தில் அனைத்து பட்டாசுகளும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர்  வெடி விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

 

Categories

Tech |