ரஷ்யா மற்றும் சீனா நாட்டின் வெளியுறவு துறை மந்திரிகள் நேரில் சந்தித்து பேசியுள்ளனர்.
அன்ஹுய் மகாணத்தில் ஆப்கானிஸ்தான் குறித்து பேச சீனா ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ரஷ்யா வெளியுறவு துறை அமைச்சர் உட்பட பல்வேறு நாடுகளின் அமைச்சர்களும், அதிகாரிகளும் பங்கேற்றுயுள்ளனர்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போருக்குப்பின் முதல்முறையாக ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சரான செர்ஜி லவ்ரோவ்-வும் சீன வெளியுறவு துறை அமைச்சர் வாங் இ-யும் நேரில் சந்தித்து பேசியுள்ளனர்.
இந்த கூட்டத்தில் வைத்து ரஷ்யாவும் சீனாவும் தங்களுக்கு இடையில் உள்ள நட்புறவையும், ஒத்துழைப்பையும் மேலும் விரிவாக்கம் செய்ய ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.