Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஆசிரியர்கள் அடிக்கவில்லை…. “ஆதரவாக போராடிய மாணவர்கள்”…. தனியார் பள்ளியில் பரபரப்பு..!!

கோபி தனியார் பள்ளியில் அடித்ததாக புகார் கூறப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம், கோபி கச்சேரி மேட்டில் அரசு நிதி உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த 500 க்கு அதிகமான மாணவர்கள் பயின்று வருகின்றார்கள். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இந்த பள்ளியில் பயின்ற சில மாணவர்களை ஆசிரியர்கள் அடித்ததாக புகார் எழுந்துள்ளது.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட மாணவர்கள் பெற்றோர்களுடன் பள்ளியின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்கள். இதை தொடர்ந்து கோபி கல்வி மாவட்ட அதிகாரி பழனி, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டம் நடத்திய மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது உங்கள் பிரச்சினை குறித்து புகார் மனு கொடுங்கள் விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன் என்று அவர் கூறி சமாதானப்படுத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.இந்நிலையில் நேற்று காலை வழக்கமாக பள்ளிக்கு வந்த மாணவர்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அப்போது அந்த போராட்டத்தில் புகார் கூறப்பட்ட ஆசிரியருக்கு ம், பள்ளி நிர்வாகத்திற்கும் ஆதரவாக முழக்கங்கள் எழுப்பி உள்ளார்கள்.

இது குறித்து தகவல் அறிந்த கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம், போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா தேவி, காவல்துறையினர் ஆகியோர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்டுள்ளார்கள். அப்போது மாணவர்களிடம் அவர்கள் கூறியதாவது, இந்தப் பிரச்சினை குறித்து விசாரணை நடத்தி நல்ல முடிவை கல்வி அதிகாரிகள் எடுப்பார்கள். நீங்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு விட்டு வகுப்பறைக்கு சென்று படியுங்கள் என்று கூறியுள்ளார்கள்.

Categories

Tech |