16 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 16 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 28-ஆம் தேதி சிறுமி பள்ளிக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் சிறுமியை பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சாரப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த அஜித்குமார் என்பவர் சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சிறுமியை கடத்தி சென்ற அஜீத்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறுமியை மீட்டுள்ளனர்.