ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைப்பதற்கு பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்த தேவையில்லை என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க வேண்டும் என்றால் ஏற்கெனவே உள்ள விதிகளின்படி, சுற்றுச்சூழல் துறையின் அனுமதியை கட்டாயம் பெற வேண்டும். அதுமட்டுமில்லாமல் கிணறு அமைக்கப்பட உள்ள பகுதியை சுற்றி வசிக்கும் பொதுமக்களிடமும் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தி அவர்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும்.
“மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களைப் பெயரளவிற்கு மட்டுமே எதிர்த்து வரும் பழனிசாமி அரசும், அதிக எம்.பிகளை வைத்திருக்கின்ற தி.மு.கவும் மத்திய அரசின் இந்நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த தேவையான முயற்சிகளை உண்மையான அக்கறையோடு மேற்கொள்ள வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதியோ, மக்கள் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்துவதோ இனிமேல் தேவையில்லை என மத்திய அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) January 20, 2020
மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களைப் பெயரளவிற்கு மட்டுமே எதிர்த்து வரும் பழனிசாமி அரசும், அதிக எம்.பிகளை வைத்திருக்கின்ற தி.மு.கவும் மத்திய அரசின் இந்நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த தேவையான முயற்சிகளை உண்மையான அக்கறையோடு மேற்கொள்ள வேண்டும்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) January 20, 2020