Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மகளின் பெயரில் மாற்றப்பட்ட வீடு…. மாமனாரை தாக்கிய மருமகன்…. போலீஸ் விசாரணை…!!

சொத்து தகராறில் மாமனாரை தாக்கிய மருமகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு அண்ணாசாலை பகுதியில் கேசவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கேசவன் வங்கியின் மூலம் ஏலத்திற்கு வந்த 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீட்டினை வாங்கி தனது மனைவி அமுதாவின் பெயரில் பத்திரப்பதிவு செய்துள்ளார். மேலும் கேசவன் தனது வீட்டில் 50 லட்ச ரூபாய் வைத்துள்ளார். கடந்த சில நாட்களாக கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அமுதா தனது பெயரில் இருந்த வீட்டை மகளான ஹேமலதாவின் பெயரில் மாற்றி எழுதிக் கொடுத்ததோடு, 50 லட்ச ரூபாயையும் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதற்கு ஹேமலதாவின் கணவர் விவேகானந்தன் உடந்தையாக இருந்துள்ளார். இதுகுறித்து கேசவன் தனது மனைவி மற்றும் மகளிடம் கேட்ட போது திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது விவேகானந்தன் கேசவனை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து கேசவன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விவேகானந்தனை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக இருக்கும் அமுதா மற்றும் அவரது ஹேமலதாவை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Categories

Tech |