14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் தொழிற்சங்கம் சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் பூங்கா சாலையில் வைத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு நமகிரிபேட்டை ஒன்றிய தலைவர் சிதம்பரம் தலைமை தாங்கியுள்ளார். மேலும் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், மாநில பொருளாளர் முருக. செல்வராஜன், மாவட்ட செயலாளர் சங்கர், பொருளாளர் பிரபு உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.