ஆட்டோ ஓட்டுனரை தாக்கிய 6 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கரசங்கால் பெரியார் தெருவில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கார்த்திகை 6 நபர்கள் சேர்ந்து கல், கம்பு மற்றும் ஹெல்மெட்டுகளால் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக கார்த்திக் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் குற்றவாளிகளை பிடிக்க கமிஷனர் ரவி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி காவல்துறையினர் விக்கி, கோபி ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் 4 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். அப்போது அவர்கள் கரசங்கால் பகுதியில் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. மேலும் அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திவாகர், சுதாகரன், சுந்தர் மற்றும் செந்தில்குமார் ஆகிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.