Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு குட் நியூஸ்!…. ஓராண்டுக்குள் இணைய வசதி…. அரசின் அதிரடி அறிவிப்பு….!!!!

2022- 23 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அம்சங்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அதில், பாரத் நெட் திட்டத்தின் வாயிலாக அனைத்து கிராமங்களிலும் இணையவழி சேவை ஏற்படுத்தப்படும் என்ற அம்சமும் இடம்பெற்றிருந்தது. இந்த நிலையில் பாரத் நெட் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை செயல்படுத்த அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

பாரத் நெட் திட்டம் மூலம் 12,525 கிராம ஊராட்சிகளில் ஓராண்டுக்குள் இணைய வசதி ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் இ-சேவை மையங்கள் இல்லாத இடங்களில் விரைவில் இ-சேவை மையம் அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |