Categories
கல்வி மாநில செய்திகள்

10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள்…. தேர்வுத்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக இரண்டு வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும்  மூடப்பட்டு இருந்தன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றனர். இதனையடுத்து பொது தேர்வு எழுதும் 10 மற்றும் 12 ஆம் மாணவர்களுக்கு தேர்வுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடத்த திட்டமிட்டது. அதன் படி  கடந்த பிப்ரவரி மாதம் முதல் கட்ட திருப்புதல் தேர்வு நடந்து முடிந்தது.

அதில் 2 வது கட்ட திருப்புதல் தேர்வு நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு வருகின்ற ஏப்ரல் 25ஆம் தேதி முதல் மே 2 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் 10 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு விடைத்தாள்களை தேர்வு மையங்களுக்கு ஏப்ரல் 6ஆம் தேதிக்குள் கொண்டுசெல்ல வேண்டும் என தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு வருகிற மே 6ஆம் தேதி தொடங்கி மே 30ஆம் தேதி வரையும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மே 5ம் தேதி தொடங்கி மே 28  தேதி வரை நடைபெற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |