Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“அந்த சிறுவன் தொல்லை பண்றான்” கல்லூரி மாணவி அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் 17 வயது கல்லூரி மாணவிக்கும், 17 வயது சிறுவனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் கல்லூரி மாணவி திடீரென காணாமல் போய்விட்டார். இது குறித்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். இதற்கிடையே காணாமல் போன கல்லூரி மாணவி எம். புதுப்பட்டி காவல் நிலையத்தில் ஆஜராகி தன்னை 17 வயதுடைய சிறுவன் சங்கரன்கோவில் அழைத்து சென்று பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறியுள்ளார். இதனையடுத்து மாணவி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 17 வயது சிறுவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |