டி.ஜி.பி சைலேந்திரபாபு டாக்டர் பட்டம் பெற்ற 1 1/2 வயது குழந்தையை பாராட்டியுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் போலீஸ்காரராக ஜெய காமேஷ் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு 1 1/2 வயது உடைய கவினேஷ் தேவ் என்ற மகன் உள்ளார். இந்த குழந்தை பல்வேறு நாட்டுக் கொடிகள், கரன்சிகள் ஆகியவை குறித்து தெளிவாகவும் விரைவாகவும் கூறி வந்துள்ளான். இந்நிலையில் ஒரு போட்டியில் கலந்துகொண்டு கவினேஷ் டாக்டர் பட்டம் பெற்றுள்ளான். இதனால் டி.ஜி.பி சைலேந்திரபாபு குழந்தையை பாராட்டியுள்ளார்.