Categories
உலக செய்திகள்

இந்தியாவில் 3 வது அலை ஓய்ந்ததா….? அறிக்கை வெளியிட்ட அமெரிக்கா  நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம்….!!

இந்திய நாட்டில் கொரோனா மூன்றாவது அலை முடிவுக்கு வந்ததாக  அமெரிக்கா  நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம்  தெரிவித்துள்ளது.

இந்தியா நாட்டில் கொரோனா தொற்றின்  3-வது அலையானது முடிவுக்கு வரும் நிலையில் உள்ளது.  இதனால் அமெரிக்கா  இந்தியாவிற்கு  பயணம் மேற்கொள்வது ஆபத்து கிடையாது என்று  அறிவித்துள்ளது. மேலும் இது குறித்து அமெரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது “இந்தியாவுக்கு பயணம் செய்வதற்கு முன் தடுப்பூசி போடப்பட்டிருப்பதையும் கொரோனா தடுப்பூசிகளை புதுப்பித்த நிலையில் இருப்பதையும் உறுதி செய்துக்கொள்ளுங்கள்.

இந்த கொரோனா தடுப்பூசிகளை நீங்கள் புதுப்பித்த நிலையில் இருந்தாலும், நீங்கள் கொரோனா தொற்று அபாயத்தில் இருக்கக்கூடும். இந்நிலையில் 2 வயதிற்கும் மேற்பட்ட குழந்தைகள் பொது இடங்களில் முகக்கவசத்தை சரியாக அணிந்திருக்க வேண்டும்.  மேலும் இந்தியாவில் உள்ள அனைத்து தேவைகளையும், பரிந்துரைகளையும் பின்பற்ற வேண்டும்” என்று  கூறப்பட்டுள்ளன.

எனவே இந்தியாவை நம்பர் 1 குறைந்த ஆபத்து உள்ள நாடாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.  இந்நிலையில் உலக நாடுகளில் கொரோனா ஆபத்தின் அடிப்படையில் மிக அதிக ஆபத்தான நாடுகள் முதல் குறைந்த ஆபத்து உள்ள நாடுகள் வரை அமெரிக்கா பிரித்து கூறியுள்ளது.

Categories

Tech |