சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அவருடைய மகள் ஜெயபிரியா, மருமகன் நவீன்குமார் ஆகியோர் மீது நில அபகரிப்பு வழக்கில் சதித்திட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், கைதான மாஜி அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து ஜெயக்குமாரின் மருமகன் நவீன் குமார், மகள் ஜெயபிரியா ஆகியோர் கோரிய முன்ஜாமீன் மனுவை ஆலந்தூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இருவரும் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகன் மற்றும் மகளுக்கு நிபந்தபனை முன் ஜாமீன் வழங்குவதாகவும், மத்திய குற்றப்பிரிவு காவல்துறை விசாரணை அதிகாரி முன்பு இரண்டு வாரங்களுக்கு நவீன்குமார் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும், இந்த இரண்டு வாரங்களில் ஜெயப்பிரியா மத்திய குற்றப்பிரிவு விசாரணை அதிகாரி முன்பு திங்கட்கிழமை மட்டும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்” என்று நிபந்தனை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.