Categories
தேசிய செய்திகள்

Breaking : அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு…..!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வானது  அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இக்கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படியை உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களின் அகவிலைப்படியானது  34% ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த அகவிலைப்படி உயர்வால் வருகிற ஏப்ரல் மாதம் முதல் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் கூடுதல் சம்பளம் கிடைப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் மூலம் 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் மற்றும் 68.63 லட்சம் ஓய்வூதியம் பெறுபவர்களும் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த அக்டோபரில் 28 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 3% உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக 3% உயர்த்தப்பட்டு, 34 சதவீதமாக உயர்ந்துள்ளது.

Categories

Tech |