இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள 37,500 மெட்ரிக் டன் டீசலை தரையிறக்க முடியவில்லை என்று என்று பெட்ரோலிய கூட்டமைப்பு தலைவர் சுமித் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பெட்ரோலிய கூட்டமைப்புத் தலைவர் சுமித் அந்நாட்டு மக்களுக்கு முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது இலங்கையிலுள்ள எரிபொருள் நிலையங்களில் டீசல் இருப்பு இல்லாததால் இன்றோடு சேர்த்து இருநாட்கள் மக்கள் வரிசையில் நிற்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி அவர் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள சுமார் 37,500 மெட்ரிக் டன் டீசலை தரை இறக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.