ஜமீன் பல்லாவரத்தில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், பள்ளியக்ரகாரம் கிழக்குத் தெருவில் வசித்து வருபவர் சடகோப ராமானுஜம். இவருடைய மகள் 19 வயதான பவித்ரா. இவர் ஜமீன் பல்லாவரத்தில் வேம்புலி நகர், 3 வது தெருவில் இருக்கின்ற இரண்டு மாணவிகளிடன் தங்கி பி.பார்ம் நான்காம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 27-ம் தேதி மதியம் படிப்பதற்காக படுக்கை அறைக்கு சென்ற பவித்ரா நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த உடன் தங்கியிருந்த மாணவிகள், அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து பார்த்தார்கள். அப்போது அந்த அறையில் பவித்ரா தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இத்தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து அவரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.