உக்ரைன் நாட்டில் அரசாங்க கட்டிடத்தில் ரஷ்ய படைகள் மேற்கொண்ட தாக்குதலில் 7 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ரஷ்யப்படைகள், உக்ரைன் நாட்டில் ஒரு மாதத்திற்கும் மேலாக தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், அந்நாட்டின் மைக்கோலேவ் பகுதியில் இருக்கும் அரசாங்க கட்டிடத்தில் ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதில், அந்த கட்டிடம் சேதமடைந்தது.
கட்டிடத்தின் நடுவில் மிகப்பெரிய துளை ஏற்பட்டிருக்கிறது. மேலும், தீ பற்றி எரிந்த நிலையில், மீட்பு குழுவினர், மீட்புப் பணியில் ஈடுபட்டு வருக்கிறார்கள். இத்தாக்குதலில் 7 நபர்கள் உயிரிழந்ததாகவும், 22 பேருக்கு காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.