Categories
தேசிய செய்திகள்

பீகார் முதல்-மந்திரி மீது தாக்குதல் நடத்தியவர்…. மனநல மருத்துவமனையில் அனுமதி….!!!!

முதல் மந்திரி மீது தாக்குதல் நடத்திய நபர் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பீகார் முதல்-மந்திரி நிதீஷ் குமார் தான் குழந்தை பருவத்தில் வசித்த பக்தியார்பூர்தான் என்ற பகுதிக்கு நேற்று முன்தினம் சென்றார். அவர் தனது நண்பர்களை சந்தித்துவிட்டு உள்ளூர் சுதந்திர தியாகி ஒருவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது 32 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திடீரென நிதிஷ்குமாரின் கன்னத்தில்‌ அறைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு படையினர் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்தனர். ஆனால் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தன்னை தாக்கிய வாலிபரை யாரும் துன்புறுத்தக்கூடாது என்று கூறிவிட்டார்.

இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த வாலிபருக்கு மனநலம் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கின்றனர். இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டதால் மனைவி பிரிந்து வாழ்ந்து வருகிறார். மேலும் இந்த நபர்  2 முறை தற்கொலை முயற்சியும் செய்துள்ளார். இதனையடுத்து அந்த வாலிபரை மனநல மருத்துவமனையில் காவல்துறையினர் அனுமதித்துள்ளனர். மேலும் அந்த நபருக்கு சிகிச்சை முடிந்தவுடன் விசாரணை மேற்கொள்ளப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |