Categories
மாநில செய்திகள்

அரசுத்துறை தேர்வாளர்களுக்கு…. டி.என்.பி.எஸ்.சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

அரசுத்துறை தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

அரசுத்துறை  தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போதே இணையதளத்தில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. அதாவது டி.என்.பி.எஸ்.சி பணி நியமன அடிப்படையில் குரூப் 1,2,3,4 ஆகியவற்றைத் தவிர மற்ற அனைத்து பிரிவுகளுக்கும் ஆன்லைன் விண்ணப்ப பதிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே தேர்வு எழுதுபவர்கள் விண்ணப்பிக்கும் போதே அனைத்து சான்றிதழ்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

எனவே தேர்வு எழுதுபவர்கள் தங்களுடைய சான்றிதழ்களை முன்னதாகவே இணையதளத்தின் மூலம் ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ளவேண்டும். இதில் ஏதேனும் விடுபட்டிருந்தால் தேர்வுக்கு 12 நாட்களுக்கு முன்பு சான்றிதழ் பதிவேற்றம் செய்ய அனுமதி வழங்கப்படும். இது பற்றி கூடுதல் விவரங்களுக்கு [email protected] மற்றும் [email protected] என்ற இணையதளத்தின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். மேலும் 1800 419 0958 என்ற தொலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்புகொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

Categories

Tech |