ஓவர் நைட்டில் பிரபலமான கிரிஸ் ராக்.
94-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. அப்போது ஆஸ்கர் விருது மேடையில் ஸ்டாண்ட் அப் காமடியன் க்ரிஸ் ராக்கை, நடிகர் வில் ஸ்மித் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறந்த திரைப்படத்துக்கான விருதை அறிவிக்க மேடைக்கு வந்த க்றிஸ் ராக், வில் ஸ்மித் மனைவி குறித்து பகடியாக ஏதோ சொல்ல, அதனால் கோபமடைந்த வில் ஸ்மித் மேடையில் ஏறி க்றிஸ் ராக்கை பளார் என்று அறைந்து விட்டு இறங்கி வந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இச்சம்பவத்தின் காரணமாக கிறிஸ் ராக்கும் வில் ஸ்மித்தும் டிரெண்டாகியுள்ளனர். மேலும் இச்சம்பவத்தில் காரணமாக நிகழ்ச்சிக்கு வரும் கூட்டம் அதிகமானதால் 46 டாலராக இருந்த டிக்கெட் விலை தற்போது 341 டாலராக அதிகரித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.