இருசக்கர வாகனத்தை திருடிய வாலிபருக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சித்துராஜபுரத்தில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் பிளாஸ்டிக் கேன்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு செந்தில்குமார் தனது நிறுவனத்தின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்துள்ளார். சிறிது நேரம் கழித்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை கண்டு செந்தில்குமார் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து செந்தில்குமார் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிளை திருடிய குற்றத்திற்காக முனீஸ்வரன் என்பவரை கைது செய்தனர்.இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி முனீஸ்வரனுக்கு ஒரு வருடம் ஜெயில் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.