நேற்று 2-வது முறையாக பிரமோத் சாவந்த் கோவா முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் எம்எல்ஏக்கள் 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அதனை தொடர்ந்து நேற்று புதிய அமைச்சரவையின் முதல் ஆலோசனை கூட்டம் நடந்தது. அந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பிரமோத் சாவந்த் தனது டுவிட்டர் பதிவில், “அமைச்சரவை 3 இலவச சிலிண்டர் விநியோக திட்டத்தை புதிய நிதியாண்டு முதல் செயல்படுத்த முடிவெடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
கோவா சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் அறிக்கையில் பாஜக, ஆட்சிக்கு வந்தால் வருடத்திற்கு 3 எல்பிஜி சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. மேலும் கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் அதனை நிறைவேற்றும் வகையில் இது தொடர்பில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.