Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மகளை கண்டித்த பெற்றோர்…. மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூரில் அருண் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சஞ்சய் என்ற மகனும், நிவேதா என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் நிவேதா அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்திக் கொண்டிருந்த சிறுமியை பெற்றோர் கண்டித்துள்ளனர்.

இதனால் மன உளைச்சலில் இருந்த சிறுமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் சடலத்தை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து பதிவு செய்த காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |