Categories
தேசிய செய்திகள்

மக்களே!…. உடனே இந்த 5 வேலைகளை முடிங்க…. கடைசி வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

மார்ச் 31ஆம் தேதியுடன் ஒவ்வொரு நிதியாண்டும் முடிவுக்கு வரும் என்பதால் மார்ச் 31ஆம் தேதி என்பது வருமான வரி செலுத்துவோருக்கு மிக முக்கியமான நாளாக உள்ளது. மார்ச் 31ஆம் தேதிக்குள் வரி செலுத்துவோர் அனைவரும் செய்து முடிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் சிலவற்றை பார்க்கலாம்.

வருமான வரித் தாக்கல் :-

மார்ச் 31ஆம் தேதிக்குள் 2020-21ஆம் நிதியாண்டுக்கான தாமத ரிட்டன்களை (Belated Returns) தாக்கல் செய்யலாம். இதற்காக ரூ.1000 முதல் ரூ.5000 அபராதமும் சேர்த்து வசூலிக்கப்படும்.

ஆதார் – பான் இணைப்பு :-

ஆதார் – பான் கார்டுகளை இணைக்க மார்ச் 31ஆம் தேதி தான் கடைசி நாள் என்று அரசு ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆதார் – பான் கார்டுகளை கடைசி நாளுக்குள் இணைக்கவில்லை என்றால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

வெரிஃபிகேஷன் :-

ஆன்லைனில் 2019-20ஆம் நிதியாண்டுக்கு தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி ரிட்டன்களை மார்ச் 31ஆம் தேதிக்குள் வெரிஃபை (E-Verification) செய்ய வேண்டும்.

வரி சேமிப்பு முதலீடு :-

மார்ச் 31ஆம் தேதி வரி சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதற்கான கடைசி நாள். எனவே உடனடியாக வருமான வரியை சேமிக்க விரும்புவோர் முதலீடு செய்ய வேண்டும்.

அட்வான்ஸ் வரி :-

மார்ச் 15ஆம் தேதி அட்வான்ஸ் வரி செலுத்துவதற்கான கடைசி நாள். இருப்பினும் அட்வான்ஸ் வரியை மார்ச் 31ஆம் தேதி வரை செலுத்தலாம்.

Categories

Tech |