தமிழ் திரையுலகில் சூர்யாவின் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் தற்போது வெளியான “எதற்கும் துணிந்தவன்” திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி நடைபோட்டு கொண்டிருக்கிறது. இதையடுத்து பாலாவின் இயக்கத்தில் சூர்யா41 என்ற படம் சூர்யாவின் நடிப்பில் நேற்று தொடங்கப்பட்டது. இதற்கு முன் இவர்கள் இணைந்து நந்தா, பிதாமகன் ஆகிய படங்கள் பெரும் வெற்றியை அடைந்ததுடன் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்நிலையில் இவர்கள் மீண்டும் இணைவதால் பெரும் மகிழ்ச்சியுடன் ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். சூரியா41 படத்தின் கதாநாயகியாக தெலுங்கு திரையுலகில் மிகவும் சிறந்த முறையில் விளங்கி வரும் கீர்த்தி ஷெட்டி நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். தெலுங்கு நடிகையான கீர்த்தி ஷெட்டி ஷியாம் சிங்கராஜ், உப்பென்னா போன்ற படங்களில் நடித்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.