Categories
தேசிய செய்திகள்

முப்படை பணியில் 10,303 பெண் அதிகாரிகள்… வெளியான சூப்பர் தகவல்…!!!

நாடாளுமன்றத்தின் ராஜ்யசபையில் பேசிய மத்திய பாதுகாப்புத் துறை இணை மந்திரி கூறியுள்ளதாவது, நாட்டிலுள்ள முப்படைகளில் 10,303 பெண் அதிகாரிகள் பணியாற்றி வருவதாகவும், அதில் மருத்துவர்கள் மற்றும் ராணுவ செவிலியர் சேவை அதிகாரிகளும் அடங்கும் என்று கூறியுள்ளார். மேலும் 100 பெண்கள் இந்திய ராணுவத்தில் இராணுவ வீராங்கனைகளாக பணியாற்றி வருகின்றனர்.

இதையடுத்து இந்திய விமானப்படையில் 15 பேர் போர் விமான, பெண் விமானிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து போரை எதிர்கொள்வதற்கான அனைத்து வகையிலான பதவிகளிலும் பெண் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதனை போல் முன்னதாகவே இந்திய கடற்படையில் 28 பெண் அதிகாரிகளுக்கு பணி வழங்கப்பட்டு உள்ளது.மேலும் கடற்படை விமானம் மற்றும் கப்பலிலிருந்து செல்லுகின்ற ஹெலிகாப்டர் உள்ளிட்டவற்றில் போரை எதிர்கொள்வதற்கான பணிகளில் அதிகளவு பெண் அதிகாரிகள் சேர்க்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |